கிளிநொச்சியில் புலிகளின் முகாம் வதந்தி: போலித் தகவல் பரப்பிய நபருக்கு மறியல்!

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகத் தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

46 வயதுடைய மேற்படி நபர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் பெல்லன்வில பகுதியில் வைத்து நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.