நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார்.

நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.