யாழில் நடைபெற்ற “நீதிக்கான நீள் பயணம்” மாநாட்டில் சர்வதேசப் பிரமுகர்கள் பங்கேற்று பார்வையிட்ட சிறப்புக் கண்காட்சி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும் சர்வதேச மாநாட்டில் சர்வதேசப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மாநாடு நடைபெற்ற மண்டபத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுப் பொருட்கள், அவர்கள் விரும்பிச் சேகரித்த பொருள்கள் மற்றும் அவர்களின் நினைவாக இன்று வரை உறவுகளிடம் எஞ்சியுள்ள பொருள்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேசப் பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் இந்த நினைவுக் பொருள்களைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.