டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

பட்டு வேஷ்டி சட்டையில் வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

40 கி.மீ தூரத்துக்கு கொடிகம்பங்கள் பேனர்கள் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேட்டூர் அணை பகுதி முழுவதும் போலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தண்ணீர் 45 நாட்களுக்கு திறந்துவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு- மேட்டூர் அணை இன்று திறப்பு

Mettur Dam Opening Today: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்துவிடுகிறார்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வரும் முதலமைச்சர் சாலை மார்க்கமாக மேட்டூருக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறார்.

இவரது வருகையை தொடர்ந்து மேட்டூர் அணைப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து மேட்டூர் அணை குறித்த விளக்கப்புகைப்பட கண்காட்சியையும், மேட்டூர் அணை மின்நிலையத்தையும் பார்வையிடுகிறார், அங்கிருந்து சேலம் விமான நிலையம் சென்று சென்னை திரும்புகிறார்.

Leave A Reply

Your email address will not be published.