கற்பிட்டியில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் படகு!

இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகு ஒன்று புத்தளம், கற்பிட்டிப் பிரதேசத்தில் நேற்றுக் கரை ஒதுங்கியுள்ளது.

இந்திய மீனவர்களின் பயன்பாட்டில் உள்ள வகையைச் சேர்ந்த படகு ஒன்றே இயந்திரமின்றி இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.

இது, இந்தியாவின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

கரை ஒதுங்கிய படகு தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேநேரம், இவ்வகையான இந்தியப் படகு ஒன்று கடந்த மாதமும் இதே பகுதியில் கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.