தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து! – இருவர் படுகாயம்
குருநாகல் – கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப் பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கலகெதரப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







