அம்புலன்ஸ் கோர விபத்து! சாரதி பரிதாப உயிரிழப்பு!! – 6 பேர் படுகாயம்

குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வாகனம் ஒன்று, பாதெனிய – அனுராதபுரம் வீதியில் உள்ள கத்தபஹுவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அம்புலன்ஸில் பயணித்த நால்வரும், லொறியில் இருந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அம்பன்பொல மற்றும் கல்கமுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.