உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்கும் கோட்டாவின் ரிட் மனு நிராகரிப்பு!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
