சஜித்தின் மருத்துவமனை நன்கொடை விழா இடை நிறுத்தப்பட்டது

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 96 வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் , முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்.ஜே.பி) தலைவருமான பிரேமதாச நேற்று (23) காலை பொல்கஸ்சோவிட்ட வேத்தார மருத்துவமனைக்கு 37 லட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்க தயாராக இருந்தார். இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது.

இதய பரிசோதகனை உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட இருந்தது.

இந்நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது . உதவி காவல் கண்காணிப்பாளர் ரமிந்து டி சில்வா மற்றும் கஹதுடுவ காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் வந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கூட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் அமைப்பாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், பொதுத் தேர்தல் இருப்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பங்கேற்புடன் இதுபோன்ற விழாக்களை ஏற்பாடு செய்வது சட்டவிரோதமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Comments are closed.