கிளிநொச்சியில் அதிர்ச்சிச் சம்பவம்: 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் வழங்கிப் பாலியல் வன்கொடுமை புரிந்த 19 வயது இளைஞர் கைது!

கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானத்தை வழங்கிப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 19 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – திருவையாற்றுப் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சமயத்தில், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்றே இந்த வன்கொடுமை இழைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் விசா அலுவலகம் ஒன்றை நடத்திவரும் இளைஞர் ஒருவரே சிறுமியை இவ்வாறு அழைத்துச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
……………………………………..

Leave A Reply

Your email address will not be published.