இண்டிகோ விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு: 229 பயணிகளின் உயிரைக் காத்த விமானியின் சமயோசிதம்!

பெங்களூரு,

இண்டிகோ விமானம் மங்களூரில் இருந்து நேற்று மாலை 6.30 மணிக்கு பெங்களூரு நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 229 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் இருந்தனர். விமானம், வானில் பறப்பதற்காக ஓடுபாதையில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. வானில் பறப்பதற்கு சில வினாடிகள் இருந்த நிலையில், விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

விமானியின் சாதுர்யம்
இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் உயிர் தப்பினர். பின்னர், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 229 பயணிகளில் 34 பேர் மட்டுமே அந்த மாற்று விமானத்தில் பயணம் செய்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.