இராணுவ அதிகாரிக்கு கொரோனா. 26 பேர் தனிமைப்படுத்தலுக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இராணுவ அதிகாரி அண்மையில் விடுமுறையில் வீடு சென்றுள்ளதுடன் மே மாதம் 26ம் திகதி ஹொரண நகரில் 04 கடைகளுக்கு சென்றுள்ளார்.

இதற்கமைய குறித்த 04 கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் 26 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருப்பதுடன் அவர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக ஹொரண வைத்திய அதிகாரி ஷானக மல்லிகாராச்சி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களை கையாளும் போது இராணுவ அதிகாரிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Comments are closed.