கொழும்பில் மேலும் 3 பகுதிகள் முடக்கம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

கொம்பனித்தெருவில் உள்ள ஹுனுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டத்தில் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தையில் கோகிலா வீதி என்பன இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை காலை 5 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது என அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு, எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நாளை காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.