பசுமையான யாழ் மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் நாள் மரநடுகை நிறைவு.

மூன்றாம் கட்ட பசுமையான யாழ் மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் நாள் மரநடுகை வெற்றிகரமாக நிறைவு.

கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழநியானந்தன் சனசமூக நிலையம் ஆகியன இணைந்த விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டம் மூலம்
நமது செயற்திட்டத்தின்
ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு வித்திட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட பசுமையான யாழ் என்ற செயற்றிட்டம் முதற்கட்டமாக தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி முன்றலில் வித்திடப்பட்டு அம்பனை சந்தி வரை நாட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மருதனார் மடத்தில் இருந்து உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீதியில் நாட்டப்பட்டது.

பசுமையான யாழ் செயற்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக  முதலாம் நாள் மரநடுகை கீரிமலை ஆலய முன்றலில் இன்று காலை 8.30 க்கு ஆரம்பமானது. மரநடுகையின் ஆரம்ப நிகழ்வை ஆகியோர் ஆரம்பித்து வைக்க தொடர்ந்தும் இடம்பெற்ற நேற்றைய நாளுக்கான மரநடுகையானது 60 கன்றுகளை வீதியின் இருமரங்கிலும் நாட்டிய நிலையில் நிறைவுபெற்றது

இச் செயற்திட்டமானது இன்று மற்றும் நாளைய தினங்களில் இடம்பெறவுள்ளது கீரிமலை சிவன் கோயில் முன்றலில் ஆரம்பமான மரம்நடுகை இளவாலை ஆலடி சந்தி வரையான பிரதான வீதியின் இருமருங்கிலும் நாட்டப்பட உள்ளது.

இந்த செயற்றிட்டமானது வீதியின் கரையோரங்களில் மரங்களை நாட்டி பசுமையான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதே இத் திட்டமாகும்.

நேற்றைய நிகழ்வில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ குமாரசாமி குருக்கள் வலி வடக்கு பிரதேச சபை  தவிசாளர் சோ.சுகிர்தன் 513 கட்டளை தளபதி நிசங்க பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  கிராமத்தவர்கள் இளைஞர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.