கோவிட் அடக்கம் குறித்து பிரதமரிடமிருந்து பச்சைக் கொடி! பொருத்தமான பூமியை தேர்ந்தெடுக்க ஆலோசனை

கோவிட் -19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் படி நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாக இருக்கும் வறண்ட நிலத்தை தேர்வு செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று (10) நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகள் இடையே நடந்த சிறப்பு கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சுகாதார தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று  பாராளுமன்ற அலுவலகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்றது.

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய  நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் சுமார் 36 நாட்களுக்கு வைரஸ் தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் அறிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளை இன மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஒத்துழைப்பை பெற்று தருமாறு அங்கு வருகை தந்திருந்த  முஸ்லீம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர்களான அலிசப்ரி, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித்த அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.