கருணாவின் துரோகத்தினை விடவும் TNA யின் துரோகம் படுமோசமானது – உதய கம்பன்பில

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் தெரிவித்த கருத்து குறித்து அவரை தண்டிப்பதா இல்லையா என்பதனை நீதிமன்றம் தீர்மாக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் அரசு தலையிட முடியாதெனவும் உதய கம்பன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

TNAவின் தவிசாளர் ஒருவரின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே கருணா அம்மான் ஆணையிறவு தாக்குதலையும், கொல்லப்பட்ட படையினர் குறித்த விடயத்தினையும் நினைவுபடுத்தி மட்டுமே உரையாற்றியுள்ளதாக உதய கம்பன்பில தெளிவுபடுத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் படையினரை கொன்றதாக கருணா அம்மான் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளமையானது பாரதூரமான விடயம் என தெரிவித்துள்ள கம்பன்பில, அவருக்கு இவ்வாறு பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானை நம்பி எமது அரசாங்கம் பிரதியமைச்சர் பதவியினை வழங்கியமைக்கு அவர் துரோகமிழைத்துள்ளதாகவும் கம்பில குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் கருணா அம்மானின் துரோகத்தினை விடவும் TNAயின் துரோகம் படுமோசமானது என தெரிவித்துள்ள கம்பன்பில, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை துண்டாடும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரவித்துள்ளார்.

Comments are closed.