6 கோடி ரூபாய் வீட்டை 1 கோடிக்கு பதிவு செய்த அமைச்சர் – சாட்சியாக NPP பெண் எம்.பி.

அமைச்சர் ஒருவர் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை 1 கோடி ரூபாய்க்கு பதிவு செய்துள்ளார் என்றும், இதற்கு ஒரு NPP பாராளுமன்ற உறுப்பினர் சாட்சியாக கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி குற்றம் சாட்டியுள்ளார்.
அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய் (சுமார் 1.6 மில்லியன் யூரோக்கள்) மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி, சட்டவிரோத சொத்துக்கள் உருவாக்கம் சட்டத்தின் கீழ் முதலாவது முறைப்பாடு இந்த அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான பணம் வர்த்தக அமைச்சகத்துடன் தொடர்புடைய நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது என்றும், பத்திரத்தில் கையெழுத்திட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.