பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டவர் சகோதரரை கொலை செய்து விட்டு மீண்டும் சரண்

12 ஆண்டுகளுக்குப் பிறகு,  பொது மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  ஒருவர்  வீட்டில் நடந்த வாக்கு வாதத்தின் போது தனது சகோதரனை பொல்லால் அடித்துக் கொன்று விட்டு  போலீசில் சரணடைந்துள்ளார்.

கொலை குற்றவாளியான் இவர்  12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பொது மன்னிப்பின் கீழ் நவம்பர் 30 அன்று வீடு திரும்பியுள்ளார்.

தம்புத்தேகமவை  வசிப்பிடமாகக் கொண்ட   முதியன்சேலாகே ஷெல்டன் குமாரா (53) என்பவரே சந்தேக நபராவார். உயிரிழந்தவர் தம்புத்தேகமாவில்  வசிக்கும்  முதியன்சலாகே பன்னாரியந்த குமாரா (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது வீட்டில் உள்ள படுக்கைக்கு அருகில் வைத்து தடியால் தனது சகோதரனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.