நீண்ட நாள் கனவு பலித்த போது சித்ரா உயிரோடு இல்லாத சோகம்

சித்ராவின் நீண்ட நாள் கனவு பலித்து.. கால்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளிவந்து உள்ளது!

தமிழ் சின்னத்திரையில் கஷ்டப்பட்டு, ஒவ்வொரு கல்லாய் அடிக்கி, தற்போது கொடிகட்டி பறந்து கொண்டிருந்தவர் தான் VJ சித்ரா. இவர் பல சேனல்களில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் பணியாற்றியிருக்கிறார்.

வாழ்நாள் கனவு பலித்தது!! வெளிவந்தது VJ சித்ரா ஹீரோயினாக நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!! இதோ.. - tamil360newz

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பால், தமிழகத்தில் உள்ள மக்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் சித்ரா.

மேலும் சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மன உளைச்சலின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மொத்த திரையுலகமும், அவருடைய ரசிகர்களும் சோகக் கடலில் மூழ்கி உள்ளனர்.

முதல் படமே கடைசி படமாகிடுச்சே.. சித்ராவின் 'கால்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு.. ரசிகர்கள் சோகம்! | VJ chitra's calls first look released - Tamil Filmibeat

இந்த நிலையில் சித்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கால்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சித்ராவிற்கு பல நாள் கனவாக இருந்தது சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதானாம். இதற்காக சித்ரா கடுமையான முயற்சிகளிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘உங்க கனவு நனவாகுறத பாக்க நீங்க இல்லையே’ என்று தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனராம்.

இறந்தபின் நனவாகும் சித்ராவின் வெள்ளித்திரை கனவு - 'கால்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்– News18 Tamil

Leave A Reply

Your email address will not be published.