கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றியவருக்கு பாராட்டு.

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்  உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய திரேங்திர திங் பாராட்டு விழா.

மத்திய மாகாணத்தில் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மூலம் முன்னெடுக்ககும் வேலைத் திட்டங்களுக்கு  இலங்கை இந்திய முஸ்லிம் முஸ்லிம் நட்புறவு ஒன்றியம் பாராட்டு.

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்  உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய திரேங்திர சிங் தமது 3 வருட சேவையை நிறைவு செய்து கொண்டு மீண்டும் இந்தியா செல்ல இருப்பதை முன்னிட்டு இலங்கை இந்திய  முஸ்லிம் நட்புறவு ஒன்றியம் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மூலம் முன்னெடுக்கும் கலை  கலாசார செயற் திட்டங்கள் , சமூக நல்லிணக்கம் மற்றும் தொழில் நுட்பக் கல்வி வர்த்தக நெறிமுறைகளை தொடர்ந்து ஒழுங்கு முறைகளுடன்  முன்னெடுக்கப்படும் என்று உயர்ஸ்தானிகர் திரெந்திர சிங் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம் நட்புறவு ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களினால் உயர்ஸ்தானிகருக்கு ஞாபகார்த்த சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இலங்கை இந்திய முஸ்லிம் முஸ்லிம் நட்புறவு ஒன்றயத்தின் தலைவர் ஐ. ஐனூடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அலவத்துக் கொடை விஹாராதிபதி பரணகம நந்தரத்ன ஹிமி, ஏ. எச். எம். கான், ஏ. ஜே. எம். அ~;ரப், என். எம். எம். வசீர்,  எம். எஸ்.  ஏம். பைசூன், ருமைஸ் அஹமட் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.