மஹர சிறை வன்முறை வழக்கு ஒத்திவைப்பு.

மஹர சிறை வன்முறை வழக்கு: 23ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மீதான விசாரணை வத்தளை நீதிமன்ற நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்பாக இன்று நடைபெற்றது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 4 கைதிகளின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த தவணை விசாரணையில் சமர்பித்திருந்ததுடன், அதில், கைதிகள் நால்வருமே துப்பாக்கிச்சூட்டில்தான் பலியானார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று ஏனைய 7 கைதிகளின் மரண விசாரணை தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்படவிருந்தது.

இருப்பினும் அந்த விசாரணைகள் நிறைவடையவில்லை என்பதைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் இன்று தெரியப்படுத்தியுள்ளதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.