ஐந்து கோடி ரூபா பணத்துடன் ஹெரோயினுடன் மூவர் கைது.

ஐந்து கோடி ரூபா பணத்துடன்
ஹெரோயினுடன் மூவர் கைது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து சுமார் 5 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் கடுவளை, வெலிவிட்ட மற்றும் மாலம்பே பகுதிகளில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப்  பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்தச் சுற்றிவளைப்புகளின்போது பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கடுவளை மற்றும் தலங்கம – பத்தரமுல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், 37 வயதான பெண் நுகேகொடை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் ஹேவாகம பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரிடமிருந்து 5 கோடியே 90 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.