யானையொன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு.

அனுராதபுரம் மாவட்டம் கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலுகொல்லாகடை பகுதியில் காட்டு யானையொன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் நேற்றிரவு (26) 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

நெலுகொல்லாகடை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசப்படுத்துவதாகவும் வீடுகளையும், விவசாயங்களையும் சேதப்படுத்தியதுடன் மக்களையும் விரட்டுவதாக கஹடகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸார் யானையை விரட்டுவதற்காகச் சென்றபோது யானை பொலிசார் சென்ற ஜீப் வண்டியைத் தாக்குவதற்கு முற்பட்ட போது தற்பாதுகாப்புக்காகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் தற்செயலாக யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நெலுகொல்லாகடை பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.