கொரோனாத் தாண்டவத்தால் மேலும் சில பகுதிகள் முடக்கம்.

கொரோனாத் தாண்டவத்தால்
மேலும் சில பகுதிகள் முடக்கம்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எஹலியகொடை மற்றும் கொடகவெல ஆகிய பகுதிகளின் சில இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எஹலியகொடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மின்னான, விலேகொடை, யக்குதாகொடை, அஸ்காகுல்ல  வடக்கு, போபத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், கொடகவெல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மசுமுல்ல, கொட்டகலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதனாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.