‘ரஜினியின் விருப்பத்திற்கு மாறாக, ஆர்ப்பாட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’.

‘ரஜினியின் விருப்பத்திற்கு மாறாக, ஆர்ப்பாட்டம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறிஉள்ளனர்.

ரஜினி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி, அதிருப்தி நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டம் நடத்திஉள்ளனர். அதில், ‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்’ என, அழைப்பு விடுத்து, வரும், 10ம் தேதி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, வடசென்னை மாவட்ட செயலர் சந்தானம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து, 10ம் தேதி, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். ‘அதில், நம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தென்சென்னை மேற்கு மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் அறிக்கை:உடல் நலம் கருதி, தேர்தல் அரசியலுக்கு தற்பொழுது வரவில்லை என்ற அறிக்கையை, ரஜினி வெளியிட்டிருந்தார். அதை திரும்ப பெற செய்யும் நோக்கத்தில், மன்ற நிர்வாகிகள், வரும், 10ம் தேதி, அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த போராட்டத்திற்கு, நம் தலைமை மன்றம் அனுமதி அளிக்கவில்லை.எனவே அனைவரும், ரஜினியின் முடிவுக்கு கட்டுபட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை,பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.