மாஸ்டர் புரோமோ : “எமனா இருந்தாலும் பயப்பட கூடாது”… விஜய் சேதுபதியின் மாஸ் பஞ்ச்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது அனைவரும் அறிந்தது தான்.

தீபாவளிக்காவது ‘மாஸ்டர்’ வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும், பொங்கலுக்கு கில்லியாக திரையரங்கில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ படக்குழு அறிவித்துள்ளது. 

முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, நேற்று 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே என அனுமதி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மற்றொருபுறம் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக மீண்டும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயம் மாஸ்டர் தியேட்டரில் தான் வெளியாகும் என்பதற்கு ஆதாரமாக 5வது புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நேற்று மாளவிகா மோகனன், விஜய் ரொமான்ஸ் புரோமோ வெளியான நிலையில் இன்று வில்லன் பவானியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. உலகத்துல எவன பாத்துனாலும் பயப்படலாம், ஆனா சாவு நம்மல நெருங்கிடுச்சினா, எதிர்க்க இருக்குறது எமனா இருந்தாலும் பயப்பட கூடாது என மாஸாக விஜய்சேதுபதி பேசும் வசனத்துடன் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.