சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள்.கமல்ஹாசன்

சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று துடியலூர் பிரசாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதன்படி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தமிழகம் முழுவதும் தனது தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. இந்த தேர்தல் சரித்திரம் நமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பு. இந்த தேர்தல் கட்சிக்கும், கட்சிக்குமான போர் அல்ல. ஊழலுக்கும், நேர்மைக்குமான போர்.

இந்த கூட்டம் பணம் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல. அன்பால் கூடிய கூட்டம். 3 மாதங்களுக்கு பிறகும் இதேபோல வாழ்க்கை வாழ போகிறோமா? தமிழகத்தை சீரமைக்க போகிறோமா?. செய்த தவறை திரும்ப செய்பவர்களை அறிவுரை சொல்லி மாற்றத்திற்கு வாக்களிக்க செய்யுங்கள். சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.