ஆவா தலைவன் வினோதன் யாழில் வைத்து கைது!

யாழ்பாணத்தில் செயல்படும் ஆவா குழுவின் தலைவன் எனக் கருதப்படும் வினோதன் அல்லது விதுசன் போலீஸ் அதிரடிப் படையினரால் கடந்த 27ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை சுண்ணாகம் போலீசில் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவா குழுவின் தலைவன் இன்னும் சிலரோடு காங்கேசன்துறை வீடொன்றுக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அப்பகுதியை சோதனையிட்ட போது போலீஸ் அதிரடிப் படையினரால் அவரை கைது செய்ய முடிந்துள்ளது.

Comments are closed.