Ind Vs Aus 4வது டெஸ்ட்: நடராஜன், வாஷிங்டன் சுந்தர் – 2 தமிழ்நாடு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 15) காலை இந்திய நேரப்படி ஐந்து மணிக்கு, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கியது.

இதற்கு முன்பு நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருக்கிறது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. எனவே இந்த நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருக்கிறது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா டிரா செய்ய பெரிதும் உதவிய அஸ்வின், ஹனும விஹாரி, முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, முக்கிய யார்கர் ஜஸ்ப்ரித் பும்ரா என பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இந்த நான்காவது டெஸ்டில் பங்கெடுக்கவில்லை.

அஸ்வின், ஜடேஜா, பும்ராவுக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை களமிறக்கியிருக்கிறது இந்தியா. கடந்த டெஸ்டில் விளையாடிய மொஹம்மத் சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கியிருக்கிறார்.

களமிறங்கும் தமிழ்நாடு வீரர்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிடன் சுந்தர் ஆகிய இருவருக்குமே இது தான் இந்தியா சார்பாக களமிறங்கும் முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

வீழ்ந்த விக்கெட்டுகள்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்த ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய மொஹம்மத் சிராஜ், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரை தன் ஆறாவது பந்தில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

ஒன்பதாவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர், டேவிட் வார்னரின் விக்கெட்டை வெறும் ஐந்து ரன்களில் வீழ்த்தினார். தற்போது மார்னஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் விளையாடி வருகின்றனர்.

ஆக 13 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 35 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இதுவரை மொஹம்மத் சிராஜ், நடராஜன் & ஷர்துல் தாக்கூர் மட்டுமே மாற்றி மாற்றி ஓவர்களை வீசி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் சார்பில் மார்னஸ், ஸ்மித், வேட் போன்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் களத்தில் இருக்கிறார்கள். கடந்த மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய கெமரூன் க்ரீனும் பேட்டிங் வரிசையில் இருக்கிறார்.

  • BBC

Leave A Reply

Your email address will not be published.