வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப்பின் பொருட்கள் அகற்றப்படுகின்றன

வெளிநாட்டு தகவல்களின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவணங்கள் உட்பட பல பொருட்களை வெள்ளை மாளிகையில் இருந்து அகற்றப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையின் பணி செய்த தொழிலாளர்களது ஆவணங்கள் மற்றும் பெட்டிகளை பெட்டிகளில் அடைத்து வெள்ளை மாளிகையில் இருந்து அகற்றும் காட்சிகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்து கொள்ள மாட்டார் எனவும், ஆனால் கடந்த வாரம் கேபிடல் கட்டிடத்தில் நடந்த வன்முறைக்குப் பின்னர் பின்வாங்கியுள்ளார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், பிடன் பதவியேற்கும் போது அங்கு பாதுகாப்புக்காக 25,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது – விழாவில், வன்முறை ஆர்ப்பாட்டங்கள் ஏற்படக்கூடும் என்று FBI எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.