அலவலக நேரங்களில் மாற்றம் செய்ய பரிந்துரை

அலுவலக நேரங்கள் ஆரம்பிப்பதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட குழு யோசனை முன்வைத்துள்ளது.

இது குறித்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை  போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கவுள்ளதாக குறித்த குழுவின் தலைவர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

Comments are closed.