மூன்று மாதங்களின் பின்னர் மட்டு – கொழும்பு புகையிரத சேவை ஆரம்பம்..

கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவை திங்கட்கிழமை (18) காலை முதல் மீண்டும் ஆரம்பமானது.

திங்கட்கிழமை காலை 6.10 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து முதலாவது புகையிரதம் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது. மாலை 3.15:மணிக்கு கொழும்பு புகையிரத நிலையயைச் சென்றடையும்.

இதே போன்று கொழும்புக்கான இரவு கடுகதி புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.