அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் #Joe_Biden உத்தியோகபூர்வமாக இன்று (21) ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் மரபுப்படி மிகச்சரியாக நண்பகல் 12 மணிக்கு இலங்கை நேரப்படி சற்று முன்னர் 10.30Pm மணியளவில் ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வலது கையை உயர்த்தியும் இடது கையை பைபிள் மீது வைத்தும் பதவியேற்றுக்கொண்டார்.

ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளாத நிலையில் குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி புஷ் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு பிடனுக்கும் புதிய நிர்வாகத்துக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதுடைய ஒருவர் (78 வயதில்) ஜனாதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்..

துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்பு.

ஜனாதிபதியின் பதிவியேற்பையடுத்து 49-வது துணை ஜனாதிபதியாக தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் #kamalaharris முறைப்படி பதவியேற்றுக் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இம்முறை கொரோனா காரணமாக மக்களை நிகழ்வுக்கு அனுமதிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பதவியேற்ற போது வெள்ளை மாளிகை முன் அதிகளவான மக்கள் கூடி வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.