சுகாதார அமைச்சர் பவித்திராவின் கணவருக்கும் கொரணா தொற்று உறுதி.

சுகாதார அமைச்சர் பவித்திராவின் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த அதிகாரிகள் நேற்று மாலை முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுக்கு உள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு சிகிச்சைக்காக நேற்று மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டது.

இதற்கிடையில் அமைச்சருடன் தொடர்புடையவர்கள் தொடர்புள்ளவர்கள் பட்டியலில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.