அரச சேவையாளர்களுக்கு 9 – 4.45, தனியார் ஊழியர்களுக்கு 9.45 – 6.45

அரச அலுவலகங்கள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 4.45க்கு முடிவடையும் அதேவேளை தனியார் துறையினர் காலை 9.45 முதல் மாலை 6.45 வரை அவர்களின் அலுவலக நேரமாக அமையுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு அரச மற்றும் தனியார் துறையின் அலுவலக நேரத்தை சீர்த்திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவின் அறிக்கை அமைச்சின் செயலாளர் காமினி செனவிரட்னவினால் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்யை தினம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர் இதன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருமென அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலை நேரங்களில் மாற்றங்களை கொண்டு வராத போதிலும் குறிப்பிட்ட நேரத்தில் பாடசாலை மாணவர்களை அழைத்துச்செல்வதற்கான வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.