விவசாயிகள் போராட்டம் வன்முறையாக வெடித்தது.ஒருவர் பலி.

டில்லியில் விவசாயிகள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. நள்ளிரவு முதல 144 தடை உத்தரவு. ஒருவர் பலி.

இந்தியாவின் தலைநகர் டில்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தின நாளான இன்று, விவசாயிகள் மாபெரும் உழவு இயந்திர பேரணியை நடத்தினர் இதற்கு நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

சுமார் 3 லட்சம் உழவு இயந்திரங்களால் நடத்தப்பட்ட இப்பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. விவசாயிகள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், பொலிஸாரின் தடையை தகர்த்து முன்னேறிச் சென்று செங்கோட்டையை முற்றுகையிட்டனர் பொலிஸார் கண்ணீர் புகை குண்டும் வீசினர்.

அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தியதுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சில இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

இணையத்தளங்கள் முடக்கம். கலவரம் நீடிக்கும் சூழலில், நள்ளிரவு 12 மணிவரை டில்லி முழுவதும் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு.

டில்லியில் இன்று நள்ளிரவு முதல் பார்லி., கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரோன் கமரா மூலம் செங்கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் இல்லம், குடியரசு தலைவர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டள்ளது.

பேரணியில் ஒருவர் பலி. பேரணியின்போது ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால்தான் அவர் உயிரிழந்தார் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதேவேளையில் உழவு இயந்திரத்தைக் கொண்டு தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது உழவு இயந்திரம் கவிழ்ந்துதான் அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.