அலோசியஸின் பிணைமுறி பணம் பெற்ற 118 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் – பிமல் (JVP)

மத்திய வங்கி பத்திர மோசடியில் சந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்ற 118 முன்னாள் எம்.பி.க்கள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

“இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கம் அமைக்கப்பட்டால், ஒட்டுமொத்த அணியிடமும் நாங்கள் கேட்பது சஜித் பிரேமதாசவின் கட்சியில் இருந்து எத்தனை பேர் தாவப் போகிறீர்கள் ? வெற்றி பெறும் ரணிலின் ஆட்கள் அத்தனை பேரும் தாவுவார்கள் எனத் தெரியும். கோட்டாபயவுக்கு தாம் உதவப் போவதாக ரணில் ஏற்கனவே சொல்லியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி படையின் கூட்டத்தில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.

Comments are closed.