போதைப்பொருள் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ள கொள்கலன்.

சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றிற்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றுக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருவதாக உப தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி புதிய பாலம் அமைக்கும் காலப்பகுதியில் அதன் ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தி கைவிட்ட நிலையிலுள்ள கொள்கலனில் போதைபொருள் பாவனையாளர் அதனை போதைப்பொருள் பாவிப்பதற்கு பயன்படுத்தும் இடமாக ஆக்கியுள்ளனர்.

இந்தக் கொள்கலன் சுமார் 12 வருடங்களுக்கு மேலாக அதே இடத்திலே கிடப்பதினால் இவ்வாறு சமூக சீர்கேடுகள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.

இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ள குறித்த கொள்கலனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டிகொள்கின்றனர்.

குறித்த கொள்கலனை பிரதேச சபை நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த பிரதேச சபையின் 34 ஆவது அமர்வின் போது தான் கருத்துத் தெரிவித்துள்ளதாக உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.