40 வயது ரியா சென்னின்.. வைரலாகும் செக்சி போட்டோஸ்….

காண்போரை கிறங்கடிக்கும் கண்களாலும் ஆளைக் கொல்லும் அழகாலும் பின்னிப் பிணையும் தேகத்தாலும் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் ரியா சென்.

இப்போது இவர் இண்டர்நெட்டில் ஷேர் செய்துள்ள ஒரு கவர்ச்சி போட்டோ தீயாய் பரவி வருகிறது. நடிகை ரியா சென், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக மாற்ற நடிகை ரியா தனது ஹாட்டான போட்டோஸை ஷேர் செய்துள்ளார், மேலும் அதில் வயது என்பது வெறும் எண், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களின் தகுதி இருக்கும்! (Sic) என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது மேலும் ரியாவின் தைரியமான போஸ் பலரையும் திக்குமுக்காடவைத்துள்ளது.

பாலிவுட்டின் புகழ்பெற்ற பல நடிகைகளில் ரியாவும் ஒருவர், அவரது தோற்றம் மற்றும் நடிப்புக்கு திரையுலகில் பலரால் அறியப்படுபவர்.

மூத்த நடிகர் மூன் மூனின் மகளான ரியா, திரிபுராவின் அரச வம்சாவளியைச்சார்ந்தவர். ரியா குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ரியா தனது திரைப்பட வாழ்க்கையை 10 வயதில் தொடங்கினார்.

ஃபால்குனி பதக் பாடலான ‘யாத் பியா கி ஆனே லாகி’ படத்தில் ரியா புகழ் பெற்றார், இது அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அப்போது இந்த பாடல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

அதன்பிறகு, ரியா இந்தி மொழியில் மட்டுமல்லாமல், பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களைத் தவிர, ரியா ஒரு சில வலைத் தொடர்களிலும் (Web series) நடித்துள்ளார்.

சிவம் திவாரி என்பவரை திருமணம் செய்துகொண்ட ரியா, தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தனது மயக்கும் மந்திர கண்களால் பலரையும் முதல் பார்வையிலேயே மயக்கி போட்ட ரியா சென் முதன்முதலில், தேசிய விருதுக்கு பெயர்போன இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் ‘தாஜ்மஹால்’ என்ற படத்தில் அறிமுகமானார்.

AR ரகுமான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவி இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இருப்பினும் ரியா சென்னின் நடிப்பு இதில் மிகவும் பேசப்பட்டது. இவர் இதுவரை இரண்டு தமிழ் படங்களில் நடித்த்திருக்கிறார் அந்த இரண்டுமே இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி பல ஹிட்ஸ்களை கொடுத்துள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்போதைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.