‘சலுகை இல்லையேல் விலை அதிகரிக்கும்’

பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரிக்கக்கூடும் என அகில
இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தொழிற்துறைகள்
பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அண்மையில்
மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களால் பொருள்களின் விலை
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக பேக்கரி உற்பத்திகளுக்கு தேவையான மூலப்பொருள்களின்
விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுத் தொடர்பில்
ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு எழுத்துமூலமாக
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போக்கரி உற்பத்திப் பொருள்களுக்கான மூலப்பொருள்களுக்கு சலுகை
வழங்காவிடின் பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலைகள்
அதிகரிக்கப்படுமெனவும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

Comments are closed.