ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் சந்தேகம்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை:ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் சந்தேகம்!
மைத்திரியின் கட்சி தெரிவிப்பு

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் தொடர்பாக அல்லாது வேறு யார், யாரையோ குற்றவாளிகளாக்கியே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சஹ்ரான் என்பவரே ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர். ஆனால், அந்தத் தாக்குதலுக்கு அவரைத் தூண்டியவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அவர்கள் யார் என்பதையே வெளிப்படுத்த வேண்டும்.

இதேவேளை, அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவையும் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது என்று நாமல் குமார என்பவர் அன்று கூறியிருந்தார்.

இதன்படி அந்தத் திட்டங்களின் பின்னால் சஹ்ரான் மட்டும் இருந்திருக்க முடியாது. இதனால் அவர்கள் யார்?, பின்னால் இருந்த நாடு எது என்ற தகவலும் வெளியிடப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.