கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு உறுதி.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக தற்போது பல்வேறு நாடுகள் தடுப்பூசியை தயாரித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

இதற்கிடையில் இங்கிலாந்தில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் இருந்து இந்த புதிய வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது.

அந்த வகையில் ஜப்பானில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து, தென் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் இதுவரை மொத்தம் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.