ரம்யா பாண்டியன் எஸ்கேப் .. சோமுக்கு ஷிவானியை செட் பண்றீங்களா? அர்ச்சனாவை விளாசும் ஃபேன்ஸ்!

ஸ்டார்ட் மியூசிக்கின் புதிய புரமோவை பார்த்து நெட்டிசன்கள் அர்ச்சனாவை திட்டித் தீத்து வருகின்றனர்.

சோமசேகருக்கும் ஷிவானி நாராயணுக்கும் கனெக்‌ஷன் கொடுக்கிறீங்களா என கிண்டல் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனாவை பார்த்தாலே நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாலாவை கண்டித்த அர்ச்சனா
பிக் பாஸ் வீட்டில் பாலாவுடன் ஷிவானி சுற்றி வந்ததை ஆரி, ரம்யா பாண்டியன், ஆஜீத், மற்றும் அர்ச்சனா என பலரும் அந்த வீட்டிலேயே கலாய்த்தனர். ஒரு படி மேலே சென்று அர்ச்சனா பாலாவை தனியாக கூப்பிட்டு கண்டித்தார். அவங்க வீட்டுல பார்த்த என்ன ஆகும் என ரொம்ப அக்கறையாகவே கேட்டார்.

சோமுக்கு கனெக்‌ஷன்
ஆனால், அதே சமயம் அர்ச்சனா தனது அன்பு தம்பி சோமசேகருக்கும் ரம்யா பாண்டியனுக்கும் கனெக்‌ஷன் ஏற்படுத்த ஏகப்பட்ட இடங்களில் முயற்சி செய்ததை பார்த்த நெட்டிசன்கள் ரொம்பவே காண்டானார்கள். பிக் பாஸ் முடித்து விட்டு ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என நினைத்த ரம்யாவும் அழகாக எதற்கும் இடம் கொடுக்காமல் அவாய்டு பண்ணிட்டார்.

ஷிவானியுடன் கோர்த்துவிட்டு
இந்நிலையில், தற்போது ஷிவானி நாராயணன் உடன் சோமசேகரை கோர்த்து விடும் வேலையை அர்ச்சனா செய்வதாக ஸ்டார்ட் மியூசிக்கின் புதிய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். இன்று (ஞாயிறு) இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது..

சோம் சிவகார்த்திகேயனாம்
பிக் பாஸ் போட்டியாளர் சோமசேகரை சிவகார்த்திகேயன் என்றும், ஷிவானி நாராயணனை கீர்த்தி சுரேஷ் என்றும் உசுப்பேற்றி விட்டு, உன் மேல ஒரு கண்ணு பாடல் காட்சியை அரங்கேற்றிய புரமோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இருவரும் இணைந்து நடனம் ஆடும் கொடுமையையும் ரசிகர்கள் பார்த்து அப்செட் ஆகி உள்ளனர்.

பாலா பார்த்தால்
ஷிவானி நாராயணன் உடன் இப்படி சோமசேகர் ஆடுவதை பாலா பார்த்தால் பாவம் என்ன ஆவார் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அர்ச்சனாவுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை அவங்களே பார்த்தாலே இரிடேட் ஆகுது என ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் இந்த புரமோவுக்கு கீழே கமெண்ட் செய்து திட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.