ஷிவானி உடனான உறவு பத்தி கேட்காதீங்க: அஜீம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்களை கழித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாஜிக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இவர்கள் இடையேயான காதல் விவகாரம் தான் பிக்பாஸின் சமீபத்திய சீசனில் ஹைலைட்டாக பேசப்பட்டது. அதே சமயம் தன்னுடன் நடித்த அஜீமிற்கும் ஷிவானிக்கும் ரகசிய உறவு இருப்பதாக ஒரு தகவல் உலா வந்தது.

சமீபத்தில் அஜீம் தனது மனைவியை விவாகரத்து செய்தார். ஷிவானிக்காக தான் அஜீம் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்பட்டது.

ஷிவானிக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஜீம், நானும் ஷிவானியும் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய 2 டிவி தொடர்களில் நடித்தோம். நாங்கள் நல்ல ஜோடி என பலரும் பாராட்டினர்.

நடன நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்ற போது எங்கள் ஜோடியை ரசிகர்கள் ரசித்தனர். இதனால் எங்களுக்குள் உறவு இருப்பதாக வதந்தி பரவியது. நடிப்பை தாண்டி எங்களுக்குள் நெருங்கிய நட்பு மட்டுமே உள்ளது. அதை தவிர எங்களுக்குள் வேறு ஒன்றும் கிடையாது.

எங்களின் விவாகரத்திற்கும் ஷிவானிக்கும் எந்த தொடர்பும் இல்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எங்கள் இருவருக்கும் இல்லை. இந்த வதந்தியில் ஷிவானியை நுழைக்காதீர்கள். நான் எனது வேலையிலும், எனது மகனை மீட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

இருவரின் விருப்பத்தின் பேரிலேயே நானும் என் மனைவியும் பிரிந்தோம். எனது திருமண வாழ்க்கை பற்றியோ, தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ இனி யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.