இங்கிலாந்து முழுவதும் இதுவரை 1.76 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்.

இங்கிலாந்தில் நாடு முழுவதும் இதுவரை 1.76 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இங்கிலாந்தில் மொத்தம் 10,406 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், நேற்று 9,834 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் கடந்த சனிக்கிழமை 445 பேர் உயிரிந்த நிலையில், நேற்று 215 பேர் உயிரிழந்தனர்.

இங்கிலாந்தில் இதுவரை 1,20,580 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 1.76 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியுடன் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.