விமானங்கள் இங்கிலாந்து வான்பாதைக்குள் நுழைய தற்காலிக தடைவிதிப்பு.

போயிங் 777 ரக விமானங்கள் இங்கிலாந்து வான்பாதைக்குள் நுழைய தற்காலிக தடைவிதிப்பு.

யுனைடெட் நிறுவனத்தின் ஏர்லைன்ஸ் நடுவானில் நேற்று முன்தினம் தீப்பிடித்த சம்பவம் மற்றும் நெதர்லாந்தில் மற்றொரு Boeing 747-400 cargo விமானத்தின் இன்ஜின் பாகங்கள் விழுந்ததனையடுத்து இங்கிலாந்து வான்பாதைக்குள் அனைத்து Boeing 777 ரக விமானங்கள் பயணிக்க தற்காலிக தடைசெய்யப்படுவதாக போக்குவரத்து செயலாளர் கிரன்ட்ஸ் சப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த Boeing 777 ரக விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பிராட் அண்ட் விட்னீ 4000-112 இயந்திரங்கள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. .

இந்த வகை இயக்கப்படும் போயிங் 777 விமானத்தின் சில பழைய ரக இன்ஜின்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற இயந்திரத்துடன் விமானங்களுடன் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த போயிங் பரிந்துரைத்துள்ளது. இன்ஜின்களின் புதிய ரகங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

பிராட் அண்ட் விட்னீ 4000-112 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்களின் 69 உள்நாட்டு சேவை மற்றும் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள 59 சேவைகளையும் உடனடியாக தரையிறக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” எஞ்சின் தீ பற்றி எரிந்த சம்பவம் குறித்து விசாரிக்க பிராட் அண்டு விட்னீ நிறுவனம் தனது தொழில்நுட்ப புலனாய்வாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானில் உள்ள பிராட் அண்ட் விட்னீ எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும்வரை தரையிறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்தின் 737 மக்ஸ் ரக விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துகளை சந்தித்த நிலையில், 346 பயணிகள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த விமான தயாரிப்பு நிறுவனம், தன் மீதான நம்பிக்கையை மீட்க கடுமையாக போராடி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.