சட்டத்துறை மாணவன் மீது கொடூர தாக்கு! சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்.

சட்டத்துறை மாணவன் மீது பொலிஸார் கொடூர தாக்கு! சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்துறை மாணவன் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை மாணவன் மிகாரா குணரத்ன நேற்றிரவு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

மாணவன், அவரது சிரேஷ்ட சட்டத்தரணியின் சேவை பெறுநர் ஒருவருக்கு உணவு கொண்டு சென்றபோதே, தாக்கப்பட்டுள்ளார்.

மிகாரா குணரத்னவைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொலிஸாரின் கொடூரத்தனமான செயற்பாட்டை சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை முறையாக விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளனர்.

இதேநேரம், சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரிகளைப் பணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நால்வர் பணி நீக்கப்பட்டுள்ளனர்.

மிகாரா குணரத்ன மீது பேலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 10 பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட மாணவன், முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.