பெண்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை உள்ளவர்கள் சர்வதேச மகளிர் வாழ்த்துச்செய்தி.

பெண்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் வலிமை உள்ளவர்கள் சர்வதேசமகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதி என்பது பல பெண்களின் அர்ப்பணிப்பால் வென்றெடுக்கபட்ட ஒருநாள். இந்நாளானது பெண்களின் சமூகஇபொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உரிமைகளை வென்றெப்பதற்கும் பெண்களின் சாதனைகளை பாராட்டும் நாளாக அமையவேண்டும் என்று பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் தலைவி பொ.லோகேஸ்வரி தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் தலைவி பொ.லோகேஸ்வரி விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
நாட்டின் முன்னேற்றத்திற்கும்இ குடும்பத்தின் வளர்ச்சிமற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை சரியான தொலைநோக்கோடு கொண்டுசெல்வதில்பெண்களின் பங்குஅளப்பறியது.பால் நிலை சமத்துவம் என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. சுருங்கக்கூறின் எல்லா மனித உயிர்களுக்கும் சம உரிமை சமனான கௌரவம் சமமாக நடத்துதல் ;மரியாதை மற்றும் வாய்ப்புக்கள் என்பன கிடைப்பதுடன் அதேபோல் நிலஉரிமை சொத்து என்பன புறக்கணிப்பு ஏதுமின்றி கிடைக்கப்பெறல் வேண்டும்.

பால்நிலை சமத்துவம் என்பது மேற்கூறப்பட்ட அனைத்தும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு கிடைக்கப பெறசெய்தலாகும். இவற்றின் அடிப்படையில் அனுபவிக்க முடியாது தடுக்கும் எப்பொருளும்இ எச்செயலும் பெண்களுக்கு எதிரான உரிமைமீறல் அல்லது பாகுப்பாடு என பொருள் கொள்ளப்படும்.

இப்படி வலிமை உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆதிக்க போக்குடைய அதிகாரத்துக்கு எதிராக போராட வேண்டும். இல்லாவிடின் சமூகஇ பொருளாதார கலாச்சார ரீதியாக தூக்கி ஏறியபடுகிறாள் தற்போதைய சமூகமானது வன்மங்கள் மனதில் கூடிக கொண்ட சமூகமாக காணப்படுகின்றது.

இதனை நாங்கள் அன்றாட பெண்களுக்கெதிராகவும் ஆண்களுக்கெதிராக நடைப்பெறுகின்ற வன்முறைகளை பார்க்கும்போது தெளிவாகின்றது.எனவே பெற்றோர் பிள்ளைகளை புத்தகங்களை படித்துஇ பாடமாகி அதிகமான புள்ளிகளை பெற்று வகுப்பில் முதலாவது இடம் பல்கலைகழகத்தில் முதலாம் இடம் என்ற இயந்திரமயமாக்கலில் இருந்து அவர்களை நல்ல பழக்கவழக்கங்கள் உடையவராக அடுத்தவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாக ஏனைய உயிர்களின் வலியை உணரக்கூடியவராகவளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

ஓவ்வொரு வீட்டிலும் ஒரு அப்துல்கலாம் பாரதியார் ஜவுலா போன்றவர்கள் உருவாகுவதற்கு நாம் இன்னும் மிகசிறப்பாக செயற்படவேண்டும். அப்படிசெயற்பட்டால் ஒவ்வொருகுடும்பமும் நல்லதொரு பல்கலைகழகமாக விளங்கும்
இன்று நிறைய பெண்கள் படித்துபலசாதனைகள் புரிந்திருந்தாலும் அந்த மேல்மட்டத்திலேயே அவர்களின் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்கின்றார்கள். அவர்களின் போக்கு ஆதிக்கம் சார்ந்தது. சாதாரண பெண்களை மறந்து விடுகின்றார்கள். அவர்களை நினைக்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. இல்லாவிட்டால் அந்த பாமர பெண்களை பார்த்து பாரிதாபப்படுவதை தவிர நாம் என்னசெய்யமுடியும் என்று தம்முடைய நிலைப்பாட்டை சுருக்கிக்கொள்கின்றார்கள்.

தம்முடைய சுயதேவைகளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேவந்து சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு தம்மை ஈடுப்படுத்த வேண்டும்.
2019 முதல் கொவிட் காரணமாக முழு உலகமும் சமூக பொருளாதார கலாச்சார ரீதியாக பாரியதொரு பின்னடைவுக்குதள்ளப்பட்டது.

இதனால் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் குறிப்பாக சகலதுறைகளை சார்ந்த பெண்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள் அன்றாடம் கூலி தொழிலுக்கு செல்லும் பெண்கள் தமது உணவை பெற்றுக்கொள்ளுவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டன.

இவ்வளவு சவால்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவதுகொவிட் அல்லது கொரோனாவுடன தான் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முறைசாரதொழில்களில் ஈடுப்படும் பெண்கள் தமது அறியாமையினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

அடக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்க்க சக்திவேண்டும். அதிகாரத்தை எவரும் நமக்குவெள்ளித் தட்டில் வைத்து வழங்கப் போவதில்லை ஆதலால் நாமே நம்மை இதற்காகபயன்படுத்திக் கொள்வதுஅவசியம். நாம் ஒன்று சேர்ந்து எமது சக்தியையும் ஆற்றலையும் திரட்டிக்கொள்ளவேண்டும். நாம் நமது உரிமைகளைப் பாதுகாத்து கூட்டாக மேம்பாடு அடையச்செய்து பொது இலட்சியங்களுக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஒற்றுமையே நமது பலமாக பெண்கள் தினமானது வெறும் மேடைபேச்சுகளுக்கு மாத்திரம் நிறுத்திவிடாதுஇ
100 சதவீதம் பெண்களுக்கு எப்போது கல்வி கிடைக்கும்? பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் எப்போது பெண்கள் பயணிக்க மற்றும் தொழில் செய்யமுடியும்? விளம்பரங்களில் பெண்களை இழிவுப்படுத்துவதை எப்போது இவ்வுலகம் நிறுத்தும்? பால்நிலை சமத்துவம் பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்? பெண்களுக்கும் ஆண்களுக்கும் எதிலும் சமவுரிமை சமவாய்ப்பு மகளிர் தினத்தை காட்டி போலியாக பெண்கள் மீது கருணைக்காட்டுவதை எப்போது நிறுத்தப்போகின்றீர்கள்? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு ஒவ்வொருவரும் முயற்சித்தாலே சமூகத்தில் நடக்கின்ற அநீதிகளை குறைப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு முடியும்.

ஆனால் நம்மில் எத்தனைபேர் இதற்குதயாராக இருக்கின்றோம்.
உண்மையான பால்நிலை சமத்துவத்திற்கும் வன்முறைகளுக்கு எதிராகவும் செயற்பாடுகள் வருடம் முழுதும் தொடரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.