பெண் சட்டத்தரணி கொலை : சொத்துக்கள் கொள்ளை

தெஹிவளை, களுபோவில வீடொன்றில் தனியாக வசித்து வந்த 64 வயதுடைய சட்டத்தரணி ஒருவர் படுக்கையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி, அந்த வீட்டில் தனியாக நேரத்தைக் கழித்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுகோதரர் தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்துள்ளதோடு, கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிவரை இருவரும் தொலைபேசியில் தொடர்பில் இருந்தமை பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சகோதரரின் நண்பரான மிரிஹானவில் வசிக்கும் ஒருவர் நேற்று (29) பிற்பகல் கொஹுவல பொலிஸாருக்கு சென்று , கனடாவில் வசிக்கும் நண்பரின் சகோதரி பெப்ரவரி 15ம் திகதிக்கு பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என கொஹுவல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, கொஹுவல பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ​​முன்பக்க தானியங்கி வாயிலுக்கு அடுத்துள்ள வாயில் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.

தானியங்கி வாயிலின் சிறிய வாயில் ஊடாக தோட்டத்திற்குள் பிரவேசித்த போது வீட்டின் முன்பக்க கதவும் மூடப்பட்டிருந்ததாகவும், வீட்டின் பின்பக்கம் நோக்கிய போது சமையல் அறை கதவு பாதி திறந்திருந்ததாகவும் அதன் ஊடாக உள்ளே சென்ற போது பொருட்கள் வீட்டிற்குள் அங்குமிங்குமாக சிதைந்து இருப்பதையும் அவதானித்துள்ளனர்.

உள்ளே சென்றபோது வீட்டின் வரவேற்பறையை ஒட்டிய அறைக் கட்டிலில் துணியால் மூடப்பட்டிருந்த சட்டத்தரணியின் சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டினுள் நுழைந்த சில மர்மநபர்கள் அல்லது சிலர் வீட்டில் மின்சாரத்தை துண்டித்து படுக்கையில் வைத்து அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக செய்திகள்

இன்னுமொரு இந்திய – இலங்கை ஒப்பந்தம் வேண்டும்! – ஆய்வு மாநாட்டில் திலகர் கோரிக்கை.

விளையாட்டுத் திறமைக்காக அல்ல.. சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கலாம்.

அரசாங்க தரப்புடன் இணைய , SJB MP இரண்டு பார் பர்மிட்களை பெற்று .. இரண்டு கோடிக்கு விற்றுள்ளார்.

நிலை தடுமாறிய ஹெலிகாப்டர் – உயிர் தப்பிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பாஜக எம்பி காலமானார் – விடுமுறை அறிவித்த அரசு!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

கோவிட் தடுப்பூசி சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம். தயாரித்த நிறுவனம் கோர்ட்டில் ஒப்புதல்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி நாளை இரண்டு பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

ஹாரி பாட்டர் மாளிகை மீது ரஷ்ய தாக்குதல்.

நாயாறு கடலில் கரை ஒதுங்கிய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தாயின் கைகளிலிருந்து நழுவி உலோகக் கூரையில் விழுந்த குழந்தை மீட்பு (Video)

படுகொலை சதித் திட்டங்களில் இந்தியாவின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவது ‘தீவிரமான விவகாரம்’ – அமெரிக்கா.

பொய் விளம்பரங்கள்: ஆயுர்வேத மருந்து உற்பத்தி உரிமங்கள் தற்காலிக ரத்து.

மனோ கிளிநொச்சி, ராதா கொழும்பு, திகா தலவாக்கலை- தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களின் மே தின பங்கு பற்றல்.

பெண் சட்டத்தரணி கொலை : சொத்துக்கள் கொள்ளை

Leave A Reply

Your email address will not be published.