மைத்திரியை, மஹிந்த பிதமராக்கி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது – தயாசிரி

2015 ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பிரதமர் பதவி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படும் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தால் கடந்த கால பிரச்சினைகள் எதுவும் இடம்பெற்றிருக்காது என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

‘2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி நீங்கள் குழப்பமடைய வேண்டாம் எனது பிரதமர் நீங்களே என்று மஹிந்த அறிவித்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் இறுதியில் நடந்தது என்ன? நாட்டை மீட்ட தலைவர் தோல்வி அடைந்தார். கட்சி இரண்டாக உடைந்தது.

எமது மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது அவரை பக்கத்தில்கூட எடுக்க மாட்டேன் எனக் கூறிய மைத்திரிபால சிறிசேனவே. இறுதியில் மஹிந்த ராஜபக்ஷ எம்முடன் சேர்ந்தே வென்றார்’ என அவர் கூறியுள்ளார்.

பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.

Comments are closed.